1864 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இத்திணைக்களம் தற்போது 159 வருட பெருமைமிக்க வரலாற்றுக்கு உரிமை கூறும் நிறுவனமென்ற வகையில் பொதுமக்களின் சிவில் உரிமைகளைப் பாதுகாத்து பதிவு செய்வதை தலையாய நோக்காகக் கொண்டு இலங்கையின் அசையா மற்றும் அசையும் சொத்துக்கள் தொடர்பான சட்டப்பூர்வ ஆவணங்கள் மற்றும் உரித்துக்களைப் பதிவு செய்தல் மற்றும் மக்களின் வாழ்க்கையின் அடிப்படை நிகழ்வுகளான, திருமணம், பிறப்பு மற்றும் இறப்புகளைப் பதிவுசெய்வதன் மூலமும், குறித்த ஆவணங்களின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளை வழங்குவதன் மூலமும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் ஊடாக பொதுமக்களுக்கான சேவைகளை வழங்குவதே எமது பணியாகும்.
1867 ஆம் ஆண்டு முதல், பொதுமக்களின் சிவில் உரிமைகளான திருமணம், பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் 1992 ஆம் ஆண்டில், மிகவும் துரித சேவையை வழங்குவதற்கு வசதியாக, சிவில் பதிவு நடவடிக்கைகளை பிரதேச செயலகங்கள் வரை பன்முகப்படுத்தப்பட்டது.
ஆவணப் பதிவு மற்றும் உரித்து பதிவுகளுக்காக நாடளாவிய ரீதியில் நிறுவப்பட்டுள்ள 50 காணி மற்றும் மாவட்டப் பதிவாளர் அலுவலகங்கள் ஊடாக பொதுமக்களுக்குத் தேவையான சேவைகளை வழங்கி வருவதுடன் 1998 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க காணி உரித்து பதிவுச் சட்டத்தின் கீழ் காணி உரித்துப் பதிவுகளும் இத்திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள பணியாகும்.
