அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பதிவு
அசையா மற்றும் அசையும் சொத்துக்கள்

அசையா சொத்துக்களை பதிவு செய்தல்
- காணி தொடர்பாக இடம்பெறும் கொடுக்கல் வாங்கல்களை இரு சாட்சிகள் மற்றும் அனுமதிபெற்ற நொத்தாரிசு முன்னிலையில் தரப்பினரால் எழுதப்பட்டு கையொப்பமிடப்படும் ஆவணம் உறுதிப் பத்திரம் எனப்படும்.
- காணி தொடர்பான உறுதிப் பத்திரங்கள் பல்வேறு வழிகளில் பதிவு செய்வதற்காக சமர்ப்பிக்கப்படுகின்றன. இந்த ஆவணங்கள் அனைத்தையும் அந்தந்த காணிகள் அமைந்துள்ள பிரதேதசத்தின் காணிப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

அசையும் சொத்துக்களின் பதிவு
- அசையும் சொத்து அதாவது வாகனங்கள், வணிகத்தில் சரக்கிருப்பு, இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் அல்லது ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான பற்றுச் சீட்டுகள், புத்தகக் கடன்கள் போன்றவற்றிற்கான அடமானங்கள் அசையும் சொத்தின் கீழ் பதிவு செய்யப்படலாம்.
- குறித்த சொத்துக்கள் நிறுவப்பட்டுள்ள பிரதேசத்தின் காணிப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்தல் நடவடிக்கைகளை செய்து கொள்ளாலாம்.