பிறப்பு
பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்தல் மற்றும் பிரதிகளை வழங்குதல்

நாடளாவிய ரீதியில் உள்ள 334 பிரதேச செயலகங்களின் கீழ் அமைந்துள்ள ஒவ்வொரு பதிவாளர் பிரிவிலும் நியமிக்கப்பட்டுள்ள பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புப் பதிவாளர்களினால் இந்த ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகள் பிரதேச செயலகங்களினால் விநியோகிக்கப்படுகின்றன.

பிரதேச செயலகங்களில் அமைந்துள்ள மாவட்ட பதிவாளர் பிரிவு கிழமை நாட்களில் மு.ப. 8.30 தொடக்கம் பி.ப. 3.45 வரை திறந்திருக்கும். (பணம் செலுத்துமிடங்கள் பி.ப. 3.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.)
- சனி, ஞாயிறு மற்றும் அரச விடுமுறை தினங்களில் அன்றாட நடவடிக்கைகளுக்காக அலுவலகம் திறக்கப்படாது.

பிரிவுப் பதிவாளர்களின் அலுவலக நேரம் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையாகும்.