Accessibility Tools

Information Icon

vision

நோக்கு

பொதுமக்களின் சிவில் உரிமைகள் மற்றும் அசையா மற்றும் அசையும் சொத்துக்களின் சட்டப்பூர்வ உரிமையை உறுதிப்படுத்துவதன் மூலம் ஆவணங்களை பதிவு செய்தல், பாதுகாத்தல் மற்றும் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளை வழங்குதல் ஆகியவற்றுக்கான பொதுமக்களை மையமாகக் கொண்ட சேவைகளை வழங்குவதில் முன்னோடியாக செயல்படுதல்.

vision

பணி

அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் தொடர்பான சட்ட ஆவணங்களைப் பதிவு செய்தல் மற்றும் இலங்கையில் காணி உரிமைகளைப் பதிவு செய்தல் மற்றும் மக்களின் வாழ்வில் முக்கியமான நிகழ்வுகளான திருமணம், பிறப்பு மற்றும் இறப்புகளைப் பதிவு செய்தல், அத்தகைய ஆவணங்களைப் பாதுகாத்தல் மற்றும் கோரிக்கையின் பேரில் அவற்றின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளை வழங்குதல் மற்றும் இதன்மூலம் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு உதவுதல்.

பதிவாளர் பொதுத் துறை பற்றி

பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் இயங்கும் பதிவாளர் நாயகம் திணைக்களம், இலங்கை மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் பிறப்பு, திருமணம், இறப்பு மற்றும் சொத்து தொடர்பான சட்ட ஆவணங்களை பதிவு செய்வதற்காக நிறுவப்பட்டது. .

இத்திணைக்களமானது முதன்முதலில் 1864 ஆம் ஆண்டில் காணிகளைப் பதிவுசெய்யும்  நோக்கத்திற்காக நிறுவப்பட்டதோடு அதன் பின்னர் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு பதிவு போன்ற சிவில் பதிவு நடவடிக்கைகள் இத்திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்டது 1867 ஆம் ஆண்டிலேயாகும்.

ஆவணப் பதிவு மற்றும் உரித்துப் பதிவு நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதும் 07 வலயப் பொறுப்பு பிரதிப் பதிவாளர் நாயகம் அலுவலகங்கள், 14 மாவட்ட உதவிப் பதிவாளர் நாயகம் அலுவலகங்கள், 50 காணிப் பதிவாளர் அலுவலகங்கள், 4 மத்திய ஆவணக் காப்பகங்கள் மற்றும் 334 மேலதிக மாவட்டப் பதிவாளர் அலுவலகங்கள் நிறுவப்பட்டுள்ளன.

1998 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க காணி உரித்து பதிவுச் சட்டத்தின் கீழ் காணி உரித்துகளைப் பதிவு செய்யும் நடவடிக்கையும் இத்திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட பணியாகும். இதற்கமைய, இலங்கையின் மிக முக்கியமான திணைக்களங்களில் ஒன்றான பதிவாளர் நாயகம் திணைக்களமானது பரந்தளவிலான செயற்பாடுகளை உள்ளடக்கி பொதுமக்களுக்கு மிகவும் வினைத்திறனான சேவைகளை வழங்கி வருகின்றது.

பதிவாளர் நாயகம் திணைக்களமானது அதன் நோக்கு மற்றும் பணியை நிறைவேற்றும் நோக்கில், அனைத்து பிரிவுகள் மற்றும் முழு நிர்வாக அமைப்பும் ஒரே திசையில் செயல்படுதோடு, அதன் சேவையின் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் மக்களுக்கு நட்புமிக்க செயற்திறனான சேவையை வழங்குவதற்காகவும் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் அதன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சிக்கு விஷேட கவனம் செலுத்துகின்றது. அத்தோடு சர்வதேச அளவில் தனது விடயப் பரப்பெல்லை தொடர்பாக புதிய நடைமுறைகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதோடு, தற்போது பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் இ-காணி, இ-சனத்தொகை, இ-உரித்து உட்பட்ட இ-செயற்திட்டங்களையும்,  இருமடித்தாள் மற்றும் உறுதிப் பத்திரம் வழங்கும் ஒரு நாள் சேவை செயற்திட்டங்களும் நிகழ்நிலை முறையில் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை விநியோகிக்கும் செயற்திட்டம் போன்றனவும் இலங்கை மக்களுக்கு ​பெரும் பேறாக அமைந்துள்ளது.

திணைக்களத்தின் நோக்கங்கள்

  • 20000 இற்கும் மேற்பட்ட உறுதிப் பத்திரங்களைக் கொண்ட காணிப் பதிவாளர் அலுவலகங்களில் ஒரு நாள் சேவை செயற்திட்டங்களை நடாத்துதல்.
  • நிகழ்நிலை முறைமையின் ஊடாக பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை வழங்கும் வேலைத்திட்டங்களை இலங்கை மக்களுக்கு வழங்குதல். 
  • அனைத்து நிறுவனங்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும் சர்வதேச தரத்தினாலான பிறப்புச் சான்றிதழை பதிவாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் உருவாக்குதல்.