Accessibility Tools

Information Icon

மூலதன உருவாக்கத்திற்கான கருவியாக காணியைப் பயன்படுத்துவதற்கு காணி உரிமைச் சிக்கல்கள் நீண்ட காலமாக காணப்படும் தடையாக இருந்து வருகின்றன. ஆவணங்களை அணுகுவதில் உள்ள சிரமங்கள், நீண்ட காலம் எடுக்கக் கூடிய தேடுதல்கள் மற்றும் காணிப் பதிவு அலுவலகங்களில் இடவசதி காணப்படாமை ஆகியவை இத்திட்டத்திற்கு இடையூறாக உள்ளன. எனவே, இ-காணிப் பதிவேட்டின் நோக்கம் மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதும், காணிப் பதிவேடுகள், தகவல் பதிவுகள், பரம்பரைத் தகவல்களை தயாரிப்பதற்கான வசதிகளை வழங்குவதும் ஆகும். அவ்வாறே ஆவணங்களின் பாதுகாப்பை உறுதிசெய்தல், பொது மக்களுக்கும் ஏனைய அரச நிறுவனங்களுக்கும் விரைவான, வசதியான மற்றும் செலவு குறைந்த சேவையை வழங்குதல் மற்றும் காணி பதிவு தகவல்களுக்கான அணுகலை அதிகரிப்பதன் மூலம் வர்த்தகம் செய்யும் குறிகாட்டியில் இலங்கையின் நிலையை உயர்த்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.