மேலதிக மொழிக்கான அனுமதிப் பத்திரத்திற்கு விண்ணப்பிக்கும் போது, குறித்த மொழியில் க.பொ.த. (சா.த.) பரீட்சையில் திறமைச் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்,
- தெளிவான கையெழுத்தில் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்.
- அசல் அனுமதிப்பத்திரத்தின் பிரதியொன்று
- சம்பந்தப்பட்ட மொழிக்கான திறமைச் சித்தியுடனான க.பொ.த. (சா.த.) பரீட்சைப் பெறுபேற்று சான்றிதழின் அசல் மற்றும் புகைப்படப் பிரதி (இந்தப் பிரதி பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் பதவிநிலை உத்தியோகத்தரினால் அல்லது காணிப் பதிவாளரினால் உண்மையான பிரதியெனச் சான்றுப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.)
- தேசிய அடையாள அட்டை மற்றும் அதன் புகைப்படப் பிரதி
- பரீட்சைப் பெறுபேற்று சான்றிதழில் உள்ள பெயருக்கும் நொத்தாரிசு அனுமதிப்பத்திரத்தில் உள்ள பெயருக்குமிடையில் வித்தியாசம் இருப்பின் அதற்கான உறுதிமொழி.
- முதல் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியிலிருந்து புதிய முகவரி வேறுபட்டிருந்தால் அதனை உள்ளிடுவதற்கான கோரிக்கை கடிதம்.
- விண்ணப்பிக்கும் ஒரு மொழிக்கான கட்டணமான ரூ. 3000 தொகையை திணைக்களத்தின் காசாளரிடம் செலுத்தியதற்கான பற்றுச் சீட்டு.