Accessibility Tools

Information Icon

வீட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்

பிறப்பு நிகழ்ந்து 07 நாட்களுக்குள் கிராம உத்தியோகத்தருக்கு அறிவித்தல் வேண்டும்.

ஒவ்வொரு பிறப்பு சம்பந்தமாகவும் அந்த பிறப்பு தொடர்பான படிவம் B23 இன் பிரகாரம் பூர்த்தி செய்யப்பட்ட அறிக்கையை கிராம உத்தியோகத்தரினால் பிறப்பு நிகழ்ந்த இடத்திற்குரிய பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளருக்கு அனுப்புதல் வேண்டும்.

பிறப்பு நிகழ்ந்த இடத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள பிறப்பு மற்றும் இறப்புப் பதிவாளர் பிரிவின் பதிவாளரினால் பிறப்புகள் பதிவு செய்யப்படுகின்றன. (பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர்களின் பட்டியல்).

முறையாக பூர்த்தி செய்யப்பட்ட பதிவு செய்தல் CR01 படிவத்தை பிறப்பு நிகழ்ந்த இடத்திற்குரிய பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் கையளித்தல் வேண்டும். குறித்த CR01  படிவத்தை பிறப்பு நிகழ்ந்த இடத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடமிருந்து அல்லது இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம். 

பிறப்பு தொடர்பாக அறிவிப்பதற்கு தகுதி பெற்ற நபர்கள்

  • தந்தை 
  • தாய்
  • குழந்தை பிறக்கும் சந்தர்ப்பத்தில் அருகில் இருந்தவர்கள்
  • பாதுகாவலர்

பிறப்பு தொடர்பாக அறிவிப்பதற்கு தகுதியான நபர்களால் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

  • முறையாக பூர்த்தி செய்யப்பட்ட பதிவு செய்தல் CR01 படிவம் 
  • பெற்றோரின் திருமணச் சான்றிதழின் புகைப்படப் பிரதி (இல்லையெனில் இலக்கம் 7 ஐப் பார்க்கவும்) 
  • பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ்களின் புகைப்படப் பிரதிகள்
  • தேசிய அடையாள அட்டையின் அசல் மற்றும் புகைப்படப் பிரதி       

பெற்றோர் திருமணமாகாதவர்களாக இருந்தால், தந்தையின் விபரங்களை உள்ளிடுவதற்காக பெற்றோர் இருவரும் பிறந்த இடத்திற்குரிய பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் செல்ல வேண்டும்.

பிறந்த 03 மாதங்களுக்குள் பிறப்பினை இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம். பிறந்து 03 மாதங்களுக்குப் பின்னரும் பிறப்பி​னை பதிவு செய்து கொள்ள முடியுமென்பதோடு  அதற்கு தாமதமான பிறப்பு பதிவு செய்தல் விபரங்களைப் பார்வையிடவும்.

பிறப்பு பதிவு செய்யப்பட்டதன் பின்னர், தகவல் கொடுப்பவருக்கு பிறப்புச் சான்றிதழின் பிரதியொன்று இலவசமாக வழங்கப்படும்.

பிறந்த திததி மற்றும் இடம் ஆகியவை தாய்க்குத் தெரிந்த தகவல்களின் அடிப்படையில் மாத்திரம் கூட (சில சமயங்களில் அதைவிடக் குறைவான தகவல்கள் அளிக்கப்பட்ட போதிலும்) பிறப்பினை பதிவு செய்ய முடியும். அங்கு வழங்கப்படும் தகவல்கள் தொடர்பான நிரல்கள் மாத்திரம் பூர்த்தி செய்யப்பட்டு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

**நீங்கள் குறித்த பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டவுடன், அதை வாசித்து பரீட்சித்ததன் பின்னர் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். 

(1951 ஆம் ஆண்டின் 17ம் இலக்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் பொருந்தும்.