Accessibility Tools

Information Icon

வீட்டில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்

மரணம் நிகழ்ந்த 05 நாட்களுக்குள் கிராம உத்தியோகத்தருக்கு தெரிவித்தல் வேண்டும்.

ஒவ்வொரு மரணத்தையும் பொறுத்தமட்டில், படிவம் B24 இன் பிரகாரம் தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்று கிராம உத்தியோகத்தரினால் இறப்பு நிகழ்ந்த இடத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளருக்கு அனுப்பப்படுதல் வேண்டும்.

இறப்பு பதிவு செய்யப்படுவது இறப்பு நிகழ்ந்த இடத்திற்கான பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரினால் ஆகும்.

இறப்பு பதிவு படிவம் CR02 பதிவாளரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்r. 

மரணத்தை அறிவிப்பதற்குத் தகுதியுள்ள நபர்கள்;

  • மரணம் நிகழும் போது அருகிலிருந்த நெருங்கிய உறவினர்
  • இறுதியாக நோயுற்றிருந்த போது பணிவிடை செய்த நெருங்கிய உறவினர்
  • அவ்வாறான உறவினர் இல்லாத நிலையில்,
    • இறந்தவர் வசித்த பதிவாளர் பிரிவில் வசிக்கும் இறந்தவரின் உறவினர்
  • அவ்வாறான உறவினர் இல்லாத நிலையில், 
    • இறக்கும் போது அருகிலிருந்த ஒருவர் 
    • மரணம் நிகழ்ந்த கட்டிடத்தில் வசிப்பவர்
  • மேற்குறித்த நபர்கள் இல்லாத சந்தர்ப்பத்தில், 
    • இறந்த உடலை புதைப்பவர், தகனம் செய்பவர் அல்லது வேறு வகையில் அது தொடர்பான இறுதிக் கிரியைகளை மேற்கொள்ளும் நபர். 

இறப்பு நிகழ்ந்த 03 மாதங்களுக்குள் மரணத்தை இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம்.

இறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்குப் பின்னரும் இறப்பைப் பதிவு செய்து கொள்ள முடியும், அதற்கு தாமதமான இறப்பு பதிவு செய்தல் விபரங்களைப் பார்வையிடவும்.

அறிவிப்பாளருக்கு இலவசமாக இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.  

** நீங்கள் குறித்த இறப்புச் சான்றிதழைப் பெற்றவுடன், அதை வாசித்து பரீட்சித்ததன் பின்னர் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். 

(1951 ஆம் ஆண்டின் 17ம் இலக்க பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் பொருந்தும்.)