Accessibility Tools

Information Icon

காலம் கடந்த இறப்புக்களை பதிவு செய்தல்

மரணம் நிகழ்ந்து மூன்று மாதங்களுக்குள் இறப்பு பதிவு செய்யப்படாமல் இருந்தால், அத்தகைய மரணத்தை பதிவு செய்து கொள்ளலாம்.

மரணம் நிகழ்ந்து 25 வருடங்களுக்கு மேற்படாத காலத்தினுள் மரணம் தொடர்பான பிரகடனப் படிவம் வழங்கப்பட்டிருத்தல் வேண்டும். (திடீர் மரணம் தவிர)

பிரகடனப் பத்திரம் மரணம் நிகழ்ந்த பகுதிக்குரிய பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளரிடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

பிரகடனப் பத்திரத்தை முன்வைக்க தகுதிபெற்ற நபர்கள்

  • இறக்கும் போது உடனிருந்த அல்லது
  • இறப்பெய்தியவர் இறுதியாக நோய்வாய்ப்பட்டிருந்த போது அவருக்கு பணிவிடை செய்த நெருங்கிய உறவினர். 

ஆர்வமுள்ள ஏனையவர்கள்

அறிவிப்புப் படிவத்திற்கான கட்டணம் ரூ. 60.00 ஆகும்.