பொதுவான திருமண சான்றிதழில் உள்ள பிழையை திருத்தம் செய்தல்
திருமணத்தை பதிவு செய்யும் போது ஏற்பட்ட பிழையை திருத்திக் கொள்வதற்கு குறித்த திருமணத்தின் தரப்பினர்களால் உரிய கோரிக்கையை பொருத்தமான அதிகாரம்பெற்ற மாவட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்.
தேவையான ஆவணங்கள்,
- திருமணச் சான்றிதழ்
- நீதிமன்றத்தால் கோரப்படும் ஆவணங்கள்
தரப்பினர் சட்டத்தரணியொருவர் மூலம் உரிய அதிகாரம்பெற்ற மாவட்ட நீதிமன்றத்தில் கோரிக்கையை சமர்ப்பித்தல் வேண்டும்.
குறித்த ஆவணத்தில் பிழைகள் இருப்பின், அது தொடர்பாக திருமணம் நடைபெற்ற பகுதிக்குரிய பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளருக்கு அறிவிப்பதன் மூலம் திருமண பதிவு ஆவணத்தின் இரண்டாவது பிரதி சரியாக உள்ளதா என்பதைத் பரீட்சித்துக் கொள்ளலாம்.
கண்டிய திருமண சான்றிதழில் உள்ள பிழையை திருத்தம் செய்தல்
திருமணத்தை பதிவு செய்யும் போது ஏற்பட்ட பிழையை திருத்திக் கொள்வதற்கு உரிய கோரிக்கையை திருமணத்தைப் பதிவு செய்த பகுதிக்குரிய பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளருக்கு முன்வைத்தல் வேண்டும்.
தேவையான ஆவணங்கள்,
- திருமணச் சான்றிதழ்
- விடப்பட்டுள்ள பிழை மற்றும் சரியான தகவல்களை உள்ளடக்கிய சத்தியக் கடதாசி
- இவ்விடயத்தை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஏனைய ஆவணங்கள்
முஸ்லிம் திருமண சான்றிதழில் உள்ள பிழையை திருத்தம் செய்தல்
திருமணத்தை பதிவு செய்யும் சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட பிழையை திருத்திக் கொள்வதற்கு உரிய கோரிக்கையை திருமணத்தைப் பதிவுசெய்த பகுதிக்குரிய பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளருக்கு முன்வைத்தல் வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
- திருமணச் சான்றிதழ்
- விடப்பட்டுள்ள பிழை மற்றும் சரியான தகவல்களை உள்ளடக்கிய சத்தியக் கடதாசி
- இவ்விடயத்தை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஏனைய ஆவணங்கள் ஆகியவற்றை சமர்ப்பித்ததன் பின்னர் மாவட்டப் பதிவாளரினால் முறையான விசாரணையொன்றை மேற்கொண்டதன் பின்னர் உத்தரவை பிறப்பிக்கலாம்..