Accessibility Tools

Information Icon

திருமணங்களை (பொதுவான).பதிவு செய்தல்

இரு தரப்பினரும் முஸ்லிம்கள் அல்லாத வேறு எந்தவொரு இனத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களாயின், திருமண (பொதுவான) பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளலாம்.

திருமண அறிவிப்பு இரண்டு பிரதிகளில் எழுதப்பட்டு சான்றுப்படுத்தப்பட்டு, பிரிவின் திருமணப் பதிவாளரிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும். (பெயர் மற்றும் பிறந்த திகதி என்பவற்றை சான்றுப்படுத்துவதற்கு பிறப்புச் சான்றிதழ் அல்லது ஏனைய ஆவணமொன்று)

அறிவித்தலை சான்றுப்படுத்துவதற்கு அதிகாரம் பெற்றவர்கள்

  • பிரிவின் திருமணப் பதிவாளர்
  • சமாதான நீதவான்
  • பிரசித்த நொத்தாரிசு
  • அருட்தந்தை

திருமண அறிவித்தலொன்றை வழங்குவதற்காக பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள்

  • தரப்பினர்கள் சம்பந்தப்பட்ட பிரிவில் வதிவிடம் தொடர்பான தேவையை பூர்த்தி செய்தல்
    • திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்கள் தரப்பினர் குறித்த பிரிவில் வசித்திருத்தல்.
    • திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்கள் தரப்பினர் ஒரே பிரிவில் அல்லாமல் தனித்தனி பிரிவுகளில் வசித்திருத்தல். 
    • தரப்பினர்களில் ஒரு தரப்பினர் திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்கள் இலங்கையில் வசித்திருக்கவில்லை எனின், மற்றைய தரப்பினர் 10 நாட்கள் இலங்கையில் வசித்திருத்தல்.
    • திருமண அறிவித்தலை வழங்குவதற்கு முன் கடந்த 10 நாட்களில் எந்தவொரு தரப்பினரும் இலங்கையில் வசித்திருக்கவில்லை என்றால், ஒரு தரப்பினர் 04 நாட்கள் இலங்கையில் வசித்திருத்தல்.
  • இரு தரப்பினரும் கடைசி பிறந்த திகதியில் 18 வயதை பூர்த்தி செய்திருத்தல். 
  • அவர்கள் திருமணம் செய்ய தடை செய்யப்பட்ட உறவு முறையினர்கள் அல்லாதவர்களாயிருத்தல்,
  • ஏற்கனவே செல்லுபடியாகும் திருமணமொன்றை செய்து கொள்ளாதவர்களாயிருத்தல்.

திருமணத்தை (பொதுவான) பதிவு செய்வதற்காக திருமண அறிவித்தலை உரிய பதிவாளரிடம் கையளித்து 14 நாட்கள் கழிதல் வேண்டும்.

அவ்வாறு 14 நாட்கள் கழிவதற்கு முன்னர் திருமணத்தை பதிவு செய்ய விரும்பினால், வி​ஷேட அனுமதிப்பத்திரத்தின் அடிப்படையில் பதிவு செய்வதற்கு பதிவாளரிடம் கோரலாம்.

இரண்டு பிரிவுகளின் திருமணப் பதிவாளர்களுக்கு திருமண அறிவித்தல்கள் ஒப்படைக்கப்பட்டிருப்பின், அறிவித்தல் பரிமாற்றம் மற்றும் பதிவாளரின் சான்றிதழை வழங்கியதன் பின்னர் திருமணத்தைப் பதிவு செய்து கொள்ளலாம்.

திருமணப் பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள இடமொன்றில் திருமணத்தைப் பதிவு செய்து கொள்ள வேண்டுமெனின், அதற்கான விஷேட அனுமதியைப் பெற்றுக் கொள்ள​ வேண்டுமென்பதோடு, அதற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்தல் வேண்டும்.

** மேற்கூறிய தேவைப்பாடுகளை பூர்த்தி செய்ததன் பின்னர், இரண்டு சாட்சிகள் முன்னிலையில் பதிவாளரினால் திருமணம் பதிவு செய்யப்படுவதோடு, திருமணச் சான்றிதழின் மூன்றாவது பிரதி​ மணமகளிடம் ஒப்படைக்கப்படும்.

திருமணத்தை பதிவு செய்யும் போது பதிவாளருக்கு செலுத்த வேண்டிய கட்டணம்

இல.

விடயம்

யாருக்கு செலுத்தப்பட  வேண்டும்

யாரால் செலுத்தப் பட வேண்டும்

தொ​கை (ரூ)

பணம் செலுத்தும் முறை

1

பதிவாளர் அலுவலகத்திலோ அல்லது வேறு எந்த இடத்திலோ திருமண அறிவித்த​லை உள்ளிடுதல்

பதிவாளர்

விண்ணப் பதாரர்

120.00

பணமாக செலுத்துதல் வேண்டும்

2

மேலதிக மாவட்ட பதிவாளரின் அல்லது மாவட்ட பதிவாளரின் அலுவலகத்தில் அல்லது வேறு எந்த இடத்திலும் திருமண அறிவித்த​லை உள்ளிடுதல்

மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர்

விண்ணப் பதாரர்

120.00

பணமாக செலுத்துதல் வேண்டும்

3

திருமண அறிவித்தல் தொடர்பாக பதிவாளரின் சான்றிதழை வழங்குதல்

பதிவாளர்

திருமண தரப்பினர்

120.00

பணமாக செலுத்துதல் வேண்டும்

4

திருமண அறிவித்தல் தொடர்பாக மேலதிக மாவட்ட பதிவாளரின் அல்லது மாவட்ட பதிவாளரின் சான்றிதழை வழங்குதல்

மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர்

திருமண தரப்பினர்

120.00

பணமாக செலுத்துதல் வேண்டும்

5

பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் இடம்பெறுதல்

பதிவாளர்

திருமண தரப்பினர்

900.00

பணமாக செலுத்துதல் வேண்டும்

6

மேலதிக மாவட்டப் பதிவாளரின் அல்லது மாவட்டப் பதிவாளரின் அலுவலகத்தில் திருமணம் இடம்பெறுதல்

மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர்

திருமண தரப்பினர்

900.00

பணமாக செலுத்துதல் வேண்டும்

7

பிரிவு 38(1) அல்லது 38(2) இன் கீழ் பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியே திருமணம் இடம்பெறுதல்

பதிவாளர்

திருமண தரப்பினர்

900.00

பணமாக செலுத்துதல் வேண்டும்

-----

-----

-----

 

8

பிரிவு 38(1) அல்லது 38(2) இன் கீழ் மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியே திருமணம் இடம்பெறுதல் 

மேலதிக மாவட்ட பதிவாளர் அல்லது மாவட்ட பதிவாளர்

திருமண தரப்பினர்

900.00

பணமாக செலுத்துதல் வேண்டும்

9

பிரிவு 27(3) இன் கீழ் விஷேட அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளல்

அரசாங்கத்திற்கு

திருமண தரப்பினர்

120.00

பணமாக செலுத்துதல் வேண்டும்

10

பதிவு செய்யப்பட்ட வணக்கஸ்தலத்தில் நடைபெறும் திருமணத்தைப் பதிவு செய்தல்

மாவட்ட பதிவாளர்

திருமண தரப்பினர்

900.00

பணமாக செலுத்துதல் வேண்டும்

11

பிரிவு 38 1,2 இன் கீழ் பதிவாளர் அலுவலகத்திற்கு வெளியே திருமணத்தை பதிவு செய்வதற்கான வீட்டு அனுமதிப்பத்திரத்தை வழங்குதல்

அரசாங்கத்திற்கு

திருமண தரப்பினர்

60.00

பணமாக செலுத்துதல் வேண்டும்