Accessibility Tools

Information Icon

திருமணச் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியைப் பெற்றுக் கொள்ளல்

திருமணச் சான்றிதழின் பிரதிகளை பெற்றுக்கொள்ள வேண்டியது திருமணம் நடைபெற்ற பகுதிக்குரிய பிரதேச செயலகத்திலேயாகும்.

குறித்த சான்றிதழ் தரவு அமைப்பில் சேமிக்கப்பட்டு இருந்தால், அருகிலுள்ள ஏதேனுமொரு பிரதேச செயலகத்திலிருந்தும் சான்றிதழின் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளலாம். 

  • 1960.01.01 ம் திகதி முதல் 2020.01.01 ம் திகதி வரையிலான சான்றிதழ்களின் பிரதிகளை தரவு அமைப்பிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். (தரவு அமைப்பில் உள்ளதா என்பதை உங்கள் அருகிலுள்ள பிரதேச செயலகத்தில் பரீட்சித்து உறுதிப்படுத்திக் கொள்ளம்.)

தேவையான விண்ணப்பப் படிவத்தை ஏதேனும் ஒரு பிரதேச செயலகத்தின் மாவட்ட பதிவாளர் பிரிவிலிருந்து அல்லது இத்திணைக்களத்தின் இணையதளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். document-download

அறவிடப்படும் கட்டணம்,

  • திருமணச் சான்றிதழின் இலக்கம், பதிவு செய்யப்பட்ட பிரிவு மற்றும் பதிவு செய்யப்பட்ட திகதி ஆகியன தெரிந்திருந்தால் - ஒரு பிரதிக்கான கட்டணம் ரூ.120.00 ஆகும். 
  • திருமணச் சான்றிதழின் இலக்கம் மற்றும் பதிவு செய்த திகதி ஆகியன தெரியவில்லை என்றால் (இரண்டு வருடங்களுக்கு மேற்படாத ஆவணத் தேடல் அவசியம் என்பதால்) - ஒரு பிரதிக்கான கட்டணம் ரூ.250.00. ஆகும்.

உரிய கட்டணத்தை பிரதேச செயலகத்தில் அல்லது பதிவாளர் நாயகத்தின் இலங்கை​ வங்கியின்  (புறக்கோட்டை கிளை) கணக்கு இலக்கம் 7039827 இற்கு செலுத்தியதன் பின்னர் வங்கிச் சீட்டு (Bank Slip) மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை உரிய பிரதேச செயலகத்தில் சமர்ப்பித்து சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

திருமணச் சான்றிதழைத் தபால் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டுமானால், விண்ணப்பப் படிவம் மற்றும் மேலே குறிப்பிட்டவாறு பணம் செலுத்திய பற்றுச் சீட்டுடன் சுயமுகவரியிடப்பட்ட முத்திரை ஒட்டப்பட்ட தபாலுறையையும் சேர்த்து சமர்ப்பித்தல் வேண்டும்.

திருமணம் பதிவு செய்யப்பட்டிருந்தால், செலுத்தப்பட்ட தொகைக்கு ஏற்ப தொடர்புடைய திருமணச் சான்றிதழின் கோரப்பட்ட பிரதிகளின் எண்ணிக்கை வழங்கப்படும் என்பதோடு திருமணம் பதிவு செய்யப்பட்டிருக்காவிடின், அது தொடர்பாக படிவம் B38 மூலம் அறிவிக்கப்படும்.

ஆன்லைன் விண்ணப்பங்கள்

அத்தோடு https://online.ebmd.rgd.gov.lk இற்கு பிரவேசிப்பதன் மூலம் Online முறையின் மூலம் சான்றிதழ்களின் பிரதிகளைக் கோரவும் முடியும்.