பிழைகளுடன் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களைத் திருத்துதல்
காணிப் பதிவகத்தில் பிழைகள் சகிதம் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பின் அவற்றை திருத்திக் கொள்வதற்காக 1927ம் ஆண்டின் 23 ம் இலக்க ஆவணங்களைப் பதிவு செய்தல் சட்டத்தின் பிரிவு 35 இற்கு அமைய விண்ணப்பத்தை முன்வைக்கலாம்.
குறித்த கோரிக்கையை சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய காணிப் பதிவாளரிடம் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்தல் வேண்டும்.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்,
தேவையான திருத்தத்தை மேற்கொள்வதற்கான கோரிக்கை கடிதம்
பிழைகளுடன் பதிவு செய்யப்பட்ட உறுதிப் பத்திரத்தின் மூலப்பிரதி. (பரீட்சிக்கப்பட்டதன் பின்னர் மூலப் பிரதி மீண்டும் வழங்கப்படும்)
உரிய உறுதிப் பத்திரம் பதிவு செய்யப்பட்ட இருமடித்தாள்களின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகள்.
உரிய திருத்தங்களை மேற்கொண்டதன் பின்னர் விண்ணப்பதாரருக்கு அறிவிக்கப்படும்.