காணி ஆவணமொன்றின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளை வழங்குதல் நாடு பூராகவுமுள்ள 50 காணி பதிவாளர் அலுவலகங்களின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன. காணி அமைந்துள்ள பிரதேசத்திற்குரிய காணிப் பதிவகத்தில் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்து இந்தச் சேவையைப் பெற்றுக் கொள்ளலாம்.
அலுவலக நேரம்
கிழமை நாட்களில் மு.ப. 8.30 தொடக்கம் பி.ப. 3.45 வரை திறந்திருக்கும். (பணம் செலுத்துமிடங்கள் பி.ப. 3.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்) சனி, ஞாயிறு மற்றும் அரச விடுமுறை தினங்களில் அலுவலகம் திறக்கப்படாது.
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான நடைமுறை
காணி அமைந்துள்ள பிரதேசத்திற்குரிய காணிப் பதிவகத்தில் விண்ணப்பத்தை முன்வைத்தல் வேண்டும். விண்ணப்பத்தை பின்வரும் வழிகளில் சமர்ப்பிக்கலாம்.
- அ. தபால் மூலம்
- ஆ.அலுவலகத்திற்கு கொண்டு வந்து வழங்குவதன் மூலம்
விண்ணப்பப் படிவம்
அச்சிடப்பட்ட உரிய விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்தல் வேண்டும். விண்ணப்ப படிவத்தின் இலக்கம் 'A32(A)' ஆகும். விண்ணப்ப படிவத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க தகுதியுள்ள நபர்கள்
- அ. சொத்து உரிமையாளர்
- ஆ. ஆர்வமுள்ள நபர்களின் பிரதிநிதி
விண்ணப்பம் ஒரு பிரதிநிதியால் சமர்ப்பிக்கப்பட்டால், அதிகாரமளிப்புக் கடிதம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
கட்டணம்
கட்டணத்தை பணமாகவோ அல்லது இலங்கை வங்கியின் ஏதேனுமொரு கிளையில் பதிவாளர் நாயகத்தின் 7041650 என்ற வங்கிக் கணக்கிற்கு வரவு வைப்பதன் மூலமாகவோ செலுத்தலாம். வங்கி வைப்புச் சீட்டினை இணைத்து அனுப்புதல் வேண்டும்.
ஏதேனுமொரு காணிக்குரிய ஏதேனுமொரு இருமடித் தாளொன்றை அல்லது இருமடித் தாள்களின் பிரதிகளை அல்லது பிரித்தெடுப்பொன்றைப் பெற்றுக் கொள்ளல். .
- ஒரு இருமடித் தாளுக்கான சாதாரண சேவைக் கட்டணம் - ரூ. 120.00
- ஒரு இருமடித் தாளுக்கான துரித சேவைக் கட்டணம் - ரூ. 200.00
விசாரணைகள்
உரிய காணிப் பதிவாளரிடம் விசாரணைகளை முன்வைக்கலாம். விசாரணை விபரங்களைப் பார்வையிடவும்.