சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்,
- தெளிவான கையெழுத்தில் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்.
- சட்டத்தரணி தொழிலில் இணைவதற்கான சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி. இது மீயுயர் நீதிமன்ற பதிவாளரினால் சான்றுப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
- தேசிய அடையாள அட்டையின் பிரதி
- நொத்தாரிசு அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதிப்பத்திரக் கட்டணமான ரூ. 3000 தொகையை திணைக்களத்தின் காசாளரிடம் செலுத்தியதற்கான பற்றுச் சீட்டு.
மேற்குறித்த ஆவணங்களை சமர்ப்பித்ததன் பின்னர், உரிய அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்படும்.