Accessibility Tools

Information Icon

காலம் கடந்த பிறப்புகளை பதிவு செய்தல்

பிறப்பு நிகழ்ந்து மூன்று மாதங்களுக்குள் பதிவு செய்யப்படாவிட்டால், அத்தகைய பிறப்பை காலம் கடந்த பிறப்பாக பதிவு செய்து கொள்ளலாம். (8/2008 சுற்றறிக்கையைப் பார்க்கவும்.)

அதற்காக, பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு பதிவுச் சட்டத்தின் 24வது பிரிவின் கீழான ஒரு பிரகடனத்தை பிறப்பு நிகழ்ந்த இடத்தின் பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளரிடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். (மூன்று மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை சமர்ப்பிக்கப்படும் பிரகடனப் பத்திரத்திற்கு, பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்டப் பதிவாளரினால் அனுமதி வழங்கப்படலாம்.)

பிரகடனப் பத்திரத்தை சமர்ப்பிக்கத் தகுதியானவர்கள்,

  •  பெற்றோரில் ஒருவர்
  •  குழந்தையின் பாதுகாவலர்
  •  ஆர்வமுள்ள எவரேனும் ஒருவர்

பிரகடனப் பத்திரத்திற்கான கட்டணம் ரூ. 60.00.

பிறந்த ஒரு வருடத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் பிரகடனப் பத்திரத்துடன் பின்வரும் ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

  • பெற்றோர் திருமணம் முடித்தவர்களாயின், அவர்களது திருமணச் சான்றிதழின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி​யொன்று
  •  பிறந்த நபரின் பிறந்த திகதி மற்றும் இடத்தை உறுதிப்படுத்தும் பின்வரும் ஆவணங்களில் ஒன்று
    • வைத்தியசாலை பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
    • கிராம உத்தியோகத்தரின் பிறப்பு பதிவு அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி (B23)
    • தோட்ட பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
    • குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தரின் சான்றிதழ்

மேலே குறிப்பிட்ட ஆவணங்கள் எதுவும் இல்லை என்றால், அதற்குப் பதிலாக பின்வரும் ஆவணங்களில் ஒன்று,

  • ஆரோக்கிய விருத்திப் பதிவேடு
  • ஞானஸ்நான சான்றிதழ்
  • பாடசாலை சேர்வு பதிவேட்டின் சான்றுப்படுத்திய பிரதி/ மாணவர் முன்னேற்ற அறிக்கை 
  • தோட்ட நலன்புரி உத்தியோகத்தரின் அறிக்கை
  • பிறந்த திகதிக்கு அண்மித்து தயாரிக்கப்பட்ட சோதிடம் அல்லது ஜாதகக் குறிப்பு-

இந்த ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றால், தெரிந்த விபரங்களை உள்ளடக்கிய பிரகடனப் பத்திரம் மற்றும் உறுதிமொழிப் பத்திரம்.

பிறந்து ஒரு வருடத்தின் பின்னர் சமர்ப்பிக்கப்படும் பிரகடனப் படிவத்துடன் பின்வரும் ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

  •  பிறப்பு பதிவு செய்யப்படவில்லை என்பதற்கான சான்றிதழ் (வெற்று சான்றிதழ்)
  •  பெற்றோர் திருமணம் முடித்தவர்களெனின் அவர்களது திருமணச் சான்றிதழின் சான்றுப்படுத்திய பிரதி
  • பிறந்த நபரின் பிறந்த திகதி மற்றும் இடத்தை உறுதிப்படுத்தும் பின்வரும் ஆவணங்களில் ஒன்று
    • வைத்தியசாலை பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்திய பிரதி 
    • கிராம உத்தியோகத்தரின் பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்திய பிரதி  (B23)
    • தோட்ட பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்திய பிரதி 
    • குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தரின் சான்றிதழ்

மேலே உள்ள ஆவணங்கள் எதுவும் இல்லை என்றால், அதற்குப் பதிலாக பின்வரும் ஆவணங்களில் ஒன்று,

  • ஆரோக்கிய விருத்திப் பதிவேடு
  •  ஞானஸ்நான சான்றிதழ்,
  • பாடசாலை சேர்வு பதிவேட்டின் சான்றுப்படுத்திய பிரதி/ மாணவர் முன்னேற்ற அறிக்கை 
  • தோட்ட நலன்புரி உத்தியோகத்தரின் அறிக்கை
  • பிறந்த திகதிக்கு அண்மித்து தயாரிக்கப்பட்ட சோதிடம் அல்லது ஜாதகக் குறிப்பு-

இந்த ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றால், தெரிந்த விபரங்களை உள்ளடக்கிய பிரகடனப் பத்திரம் மற்றும் உறுதிமொழிப் பத்திரம்