Accessibility Tools

Information Icon

  • காணிப் பதிவாளரினால் ஆவணங்களைப் பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 36(1) மற்றும் (2) இற்கு அமைய நிராகரிக்கப்பட்ட சட்டபூர்வமான ஆவணமொன்றை குறித்த சட்டத்தின் பிரிவு 38(2) இன் கீழ் நிராகரிக்கப்பட்ட தினத்திலிருந்து 30 நாட்களுக்குள் பதிவாளர் நாயகத்திடம் மேன்முறையீடு செய்யலாம்.
  • மேன்முறையீடு செய்யும் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
    • காணிப் பதிவாளர் அலுவலகத்திலிருந்து நிராகரிக்கப்பட்ட உறுதிப் பத்திரம்
    • மேன்முறையீடு
    • திருத்தங்கள் உள்ளடக்கப்பட்ட உறுதிமொழிப் பத்திரம் (உறுதிப்பத்திரத்தை எழுதி சான்றுப்படுத்தப்பட்ட மொழியில் உறுதிமொழிப் பத்திரம் தயாரிக்கப்படல் வேண்டும்)

மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்களை சம்பந்தப்பட்ட காணிப் பதிவாளர் அலுவலகத்தின் காணிப் பதிவாளரிடம் ஒப்படைத்தல் வேண்டும்.