
பணிகள்
அசையா மற்றும் அசையும் சொத்துக்கள் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது. அதற்காக நாடளாவிய ரீதியில் 50 காணி பதிவகங்கள் நிறுவப்பட்டுள்ளன.

ஆவணங்கள்
ஆவணங்களை பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் மற்றும் நொத்தாரிசு கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு சான்றுப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.

அலுவலக நேரம்
கிழமை நாட்களில் மு.ப. 8.30 தொடக்கம் பி.ப. 3.45 வரை திறந்திருக்கும். (பணம் செலுத்துமிடங்கள் பி.ப. 3.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்) சனி, ஞாயிறு மற்றும் அரச விடுமுறை தினங்களில் அலுவலகம் திறக்கப்படாது.

பதிவுசெய்வதற்காக முன்வைக்கும் வழிமுறைகள்
ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காணி அமைந்துள்ள பிரதேசத்தின் காணிப் பதிவகத்தில் பதிவு செய்வதற்காக ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பதிவு மாவட்டங்களைச் சேர்ந்த காணிகள் மற்றும் அசையும் சொத்துக்கள் தொடர்பான விபரங்கள் அடங்கிய ஆவணங்கள் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். கீழ் குறிப்பிடப்படும் முறைகளில் பதிவு செய்வதற்காக ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.
அ. தபால் மூலம்
ஆ. அலுவலகத்திற்கு கொண்டு வந்து வழங்குவதன் மூலம்

பதிவு செய்வதற்கான ஆவணங்களை முன்வைப்பதற்கு உரிமையுள்ள நபர்கள் (ஆவணங்கள் பதிவுசெய்தல் கட்டளைச் சட்டத்தின் 26ம் பிரிவின் பிரகாரம்)
An instrument may be presented for registration by -
- அ. ஆவணத்தை எழுதி கையெழுத்திடும் நபர்
- ஆ. அதன் கீழ் ஏதேனும் அனுகூலத்தை அல்லது இலாபத்தைக் கோரும் நபர்
- இ. அதன் மூலம் மாற்றப்பட்ட ஒரு சொத்துக்கான தொடர்பை அல்லது பிணைப்பைக் கொண்ட ஒரு நபர்
- ஈ. அத்தகைய நபரின் சார்பாக செயல்படும் சட்டத்தரணி அல்லது நொத்தாரிசு ஒருவர் அல்லது பிரதிநிதியொருவர்

பதிவு செய்வதற்காக சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
மூலப் பிரதி அல்லது காணிப் பதிவகத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட சான்றுப்படுத்தப்பட்ட பிரதி

ஆவணங்களை பதிவு செய்யும் வழிமுறைகள்
இந்த சேவைகள் துரித சேவை மற்றும் சாதாரண சேவை என 2 வழிகளில் மேற்கொள்ளப்படுகின்றன.

துரித சேவை
- காணிப் பதிவகத்தினால் துரித சேவைகளின் கீழ் பதிவு செய்யப்படும் ஆவணங்கள்
- விற்பனைப் பத்திரம்
- கொடை உறுதி
- ஈட்டு உறுதி
- முகவரி
- ஈட்டுச் சட்டத்தின் 47ம் பிரிவின் கீழான பிரகடனம்
- அடமானத்தை இரத்து செய்தல்
- அற்றோணி அதிகாரப் பத்திரம் (கடன் ஈட்டுமுறிக்குரிய)
- அற்றோணித் தத்துவத்தை இரத்து செய்தல்
- குத்தகை உறுதி
- குத்தகையை இரத்துச் செய்தல்
- விற்பனை ஒப்பந்தம்
- முற்கூட்டிய அறிவித்தல்
- காணிப் பதிவேடுகளின் பிரித்தெடுப்புகள் மற்றும் உறுதிப்பத்திரத்தின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளையும் இந்த சேவையின் கீழ் பெற்றுக்கொள்ளலாம்.
- வலய அலுவலகங்கள் மற்றும் மாவட்ட உதவி பதிவாளர் நாயகம் அலுவலகங்கள் மூலம் அற்றோணி அதிகாரப் பத்திரங்களை பதிவு செய்தல் மற்றும் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளல், அற்றோணி அதிகாரப் பத்திரங்களின் பிரித்தெடுப்பு பிரதிகளைப் பெற்றுக் கொள்ளல் ஆகிய சேவைகளை துரித சேவையின் கீழ் பெற்றுக் கொள்ளலாம்..
