ஆவணங்களைத் தேடுதல்
- காணிக்குரிய இருமடித் தாள்களை குறித்த காணி அமைந்துள்ள பிரதேசத்தின் காணிப் பதிவலகத்தில் பரீட்சித்துக் கொள்ளலாம்.
- ஒரு உறுதிப் பத்திரத்தின் இரண்டாவது பிரதியைப் பரீட்சித்துக் கொள்ளல் மற்றும் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளைப் பெற்றுக் கொள்ளல் ஆகியவற்றை உரிய நொத்தாரிசினால் இரண்டாவது பிரதிகளை சமர்ப்பித்த காணிப் பதிவகத்தின் மூலம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை
நொத்தாரிசு அல்லது அவரது அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதியினால்
தேடுதல் விண்ணப்பப் படிவம்
- உரிய அச்சிடப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தல் வேண்டும்.
- காணி ஆவணங்களை பரீட்சிக்கும் விண்ணப்பப் படிவம் A33(A)
- உறுதிப் பத்திரம் மற்றும் இரண்டாவது பிரதிகளை பரீட்சித்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவம் A33(B).
- விண்ணப்பத்தில் நொத்தாரிசு கையொப்பமிட்டு பதவி முத்திரையை பதித்தல் வேண்டும். ஒரு பிரதிநிதியால் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் போது, அதிகாரமளிப்புக் கடிதம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
கட்டணம்
- தேடுதல் கட்டணங்கள் பணமாக செலுத்தப்படல் வேண்டும்.
- ஒரு காணிக்குரிய கட்டணம் ரூ. 600.00