Accessibility Tools

Information Icon

 உறுதிப் பத்திரத்தின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியைப் பெற்றுக் கொள்ளல்

உறுதிப் பத்திரத்தின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகள் நாடு முழுவதிலுமுள்ள 50 காணி பதிவாளர் அலுவலகங்களினால் வழங்கப்படுகின்றன. உரிய நொத்தாரிசினால் தனது இரண்டாவது பிரதியை ஒப்டைத்துள்ள காணிப் பதிவகத்திற்கு விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலம் இந்தச் சேவையைப் பெற்றுக் கொள்ளலாம்.

அலுவலக நேரம்

கிழமை நாட்களில் மு.ப. 8.30 தொடக்கம் பி.ப. 3.45 வரை திறந்திருக்கும். (பணம் செலுத்துமிடங்கள் பி.ப. 3.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்) சனி, ஞாயிறு மற்றும் அரச விடுமுறை தினங்களில் அலுவலகம் திறக்கப்படாது.

 கோரிக்கையை முன்வைப்பதற்கான நடைமுறை

ஆவணத்தை எழுதி சான்றுப்படுத்திய நொத்தாரிசின் இரண்டாவது பிரதி ஒப்படைக்கப்பட்ட காணிப் பதிவகத்தில் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தல் வேண்டும். விண்ணப்பத்தை பின்வரும் வழிகளில் சமர்ப்பிக்கலாம்.

அ. தபால் மூலம்
ஆ.அலுவலகத்திற்கு கொண்டு வந்து வழங்குவதன் மூலம்
இ. நிகழ்நிலை முறை மூலம் (https://online.land.rgd.gov.lk/)

விண்ணப்பப் படிவம்

உரிய அச்சிடப்பட்ட விண்ணப்பப் படிவத்தை முன்வைத்தல் வேண்டும். விண்ணப்பப் படிவ இலக்கம் 'A32(B)' ஆகும். விண்ணப்பப் படிவத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் 'A32(B)'

விண்ணப்பத்தை முன்வைப்பதற்குத் தகுதியுள்ள நபர்கள்

அ. சொத்து உரிமையாளர்
ஆ. ஆர்வமுள்ள நபரின் பிரதிநிதி

விண்ணப்பம் ஒரு பிரதிநிதியால் முன்வைக்கப்படுமேயானால், அதிகாரமளிப்புக் கடிதத்தை சமர்ப்பித்தல் வேண்டும்.

 கட்டணம்

கட்டணத்தை பணமாகவோ அல்லது இலங்கை வங்கியின் ஏதேனுமொரு கிளையில் பதிவாளர் நாயகத்தின் 7041650 என்ற வங்கிக் கணக்கிற்கு வரவு வைப்பதன் மூலமாகவோ செலுத்தலாம். வங்கி வைப்புச் சீட்டினை இணைத்து அனுப்புதல் வேண்டும்.

ஏதேனுமொரு காணிக்குரிய உறுதிப் பத்திரத்தின் பிரதியொன்றைப் பெற்றுக் கொள்ளல்.
  • சாதாரண சேவையின் கீழ் உறுதிப் பத்திரத்தின் ஒரு பிரதிக்கான கட்டணம் - ரூ. 600.00
  • துரித (ஒரு நாள்) சேவையின் கீழ் உறுதிப் பத்திரத்தின் ஒரு பிரதிக்கான கட்டணம் - ரூ. 1000.00
 விசாரணைகள்

உரிய காணிப் பதிவாளரிடம் விசாரணைகளை முன்வைக்கலாம். தயவு செய்து விசாரணை விபரங்களைப் பார்வையிடவும்.  new tab